Saturday, February 6, 2010

என்னுடைய முதல் இடுகை!!!

இதோ என்னுடைய நெடு நாள் ஆசை நிறைவேறுகிறது! ஆம், நானும் பல நாட்களாக இடுகை எழுத வேண்டும், அதுவும், தமிழிலே எழுத வேண்டும் என்று நினைத்திருந்தேன். எல்லாவற்றிற்கும் காலம் கனிந்து வர வேண்டும் அல்லவா?

முதல் காதல், முதல் முத்தம்.. அது போலத்தான் இந்த முதல் இடுகை.


ஏன் இடுகை?
ஒரு பொழுதுபோக்குதான் . எத்தனை நேரம்தான் படம் பார்த்துக்கொண்டே இருப்பது? அதுவும் இங்கு உள்ள குளிரில், வெளியே செல்லும் பேச்சிற்கே இடமில்லை. நாளை இலக்கிய வரலாற்றில் எனது பெயரும் இடம் பெரும் அல்லவா :)

ஏன் தமிழில்?
ஒரு வேளை, சங்கம் வைத்து தமிழ் வளர்த்த பாண்டிய நாட்டில் இருந்து நான் வந்ததினாலா? ;) யாமறிந்த மொழிகளிலே தமிழ் போல் இனிதாவது எங்கும் காணோம். :) ஒருவன் தன்னுடய கருத்துக்களை, தன்னுடய தாய்மொழியில் மட்டுமே முழுமையாக வெளிபடுத்த முடியும் என்று பள்ளி நாட்களில், எப்போதோ கோனார் தமிழ் உரையில் படித்ததாக ஞாபகம். அது என்னவோ உண்மைதான். என்னுடைய பள்ளி நாட்களிலோ அல்லது கல்லூரி நாட்களிலோ நடந்த நிகழ்வுகளை, ஆங்கிலப்படுத்தினால் அத்தனை சுவாரஸ்யமாக இருக்காது என்பது என்னுடைய நம்பிக்கை. சித்திரம் கைப்பழக்கம், செந்தமிழ் இடுகைப்பழக்கம் :)


எதை பற்றியது என்னுடைய இடுகைகள்?

உண்மையைச் சொல்லப் போனால், இடுகை எழுதலாம் என்று முடிவெடுக்கும் முன்பே, என்ன எழுத வேண்டும் என்று முடிவு செய்திருந்தேன். முதலில், என்னுடைய வாழ்க்கையில் நடந்த சில சுவாரசியமான சம்பவங்களை மட்டும் இடுகைகளாக பதிவு செய்யலாம் என்று எண்ணி இருந்தேன். ஏனென்றால், எப்படி விரல்ரேகை ஒவ்வொருவருக்கும் வித்தியாசமாக இருக்கிறதோ, அது போல இந்த உலகத்தில் உள்ள ஒவ்வொருவரது வாழ்க்கையுமே வித்தியாசகமாகத்தான் இருக்கும். ஆனால், அதை மட்டும் செய்திருந்தால் என்னுடைய கற்பனைக் குதிரைக்கு வேலையில்லாமல் போய் விடும். மிஞ்சி மிஞ்சி போனால் தற்குறிப்பு ஏற்றிய அணியை சிறிது பயன்படுத்தலாம். அவ்வளவுதான். ;)

அனால் கற்பனை என்பது ஒரு கலை. அது நம்முடைய வாழ்க்கையை முழுமையாக மாற்றி விடும் சக்தி படைத்தது. கற்பனை செய்தல் நமது மன அழுத்தத்தை குறைக்கும் என்று சில ஆய்வுகள் கூறுகின்றன. மென்பொருள் துறையில் மன அழுத்தம் அதிகம் என்பது பொதுவான கருத்து. (அது உண்மையா இல்லையா என்று ஒரு பட்டி மன்றமே நடத்தலாம். சில இடங்களில், கணினி துறை சார்ந்த பணிகளில், மன அழுத்தம் குறைவு என்று படித்துள்ளேன். என்னுடைய கருத்தும் அதுவே.) கற்பனை செய்வது என்றால் எனக்கு மிகவும் பிடிக்கும். சிறு வயதிலேயே நான் நிறைய கற்பனை செய்வேன். உதாரணத்திற்கு, நான் பத்தாம் வகுப்பு படிக்கும் போது, நான் மாநிலத்திலேயே முதல் மாணவனாக வந்து பள்ளியில் மற்றும் பல இடங்களில் பரிசு வாங்குவதாக பல நேரங்களில் கற்பனை செய்து கொள்வேன். இது கற்பனை அல்ல, பகல் கனவு என்று நீங்கள் கூறுவது எனக்கு கேட்கிறது. :) உண்மையில், பகல் கனவு காண்பதற்கு கூட நமது கற்பனைத் திறன் தேவைப் படுகிறது. ஒரு புதிய ஆடை வாங்கும் போது கூட, அதை அணிந்தால் நாம் எப்படி இருப்போம் என்று எல்லோரும் ஒரு சிறிய கற்பனை செய்து பார்ப்பதுண்டு. இதன் மூலம் நான் சொல்ல வருவது என்னவென்றால், கற்பனை என்பது நமது வாழ்வில் பிரிக்க முடியாத ஒரு அங்கமாகிவிட்ட நிலையில், எனது இடுகையில் கற்பனை இல்லாமல் இருந்தால் நன்றாக இருக்குமா? :)

அதற்காகத்தான், என்னுடைய வாழ்க்கையில் சில முக்கியமான தருணங்களில் ( பள்ளி - பன்னிரண்டாம் நிலை, கல்லூரி இறுதி ஆண்டு, கல்யாணம்...) நான் எடுத்த/எடுக்கும் முடிவுகள், எப்படி என்னுடைய வாழ்க்கையை மாற்றியிருக்கும்/மாற்றும் என்பதை கற்பனை வடிவில் என்னுடைய இடுகைகளாக பதிவு செய்யலாம் என்றிருக்கிறேன்.

முதலில், நான் பன்னிரண்டாம் வகுப்பு முடிந்தவுடன், மருத்துவத் துறையை தேர்வு செய்திருந்தால் என்னுடைய வாழ்க்கை எப்படி அமைந்திருக்கும்/அமையும் என்பதை ஒரு கற்பனைக் கதையாக எழுதப் போகிறேன்.

இந்தக் கதை கடந்த காலத்தில் இருந்து எதிர் காலம் வரை நீளும் என்பதால், கற்பனைக்கு சிறிதும் பஞ்சமிருக்காது. இது என்னுடைய உள்ளத்தில் இருந்த/இருக்கும் சின்ன சின்ன உணர்வுகளுக்கும் உயிர் கொடுக்க வாய்ப்பாக இருக்கும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. இதில் சில உண்மை சம்பவங்களையும், அந்தந்தக் காலத்து செய்திகளையும் கலந்து கொடுக்கப் போகிறேன். முடிந்த வரையில் அழகிய தமிழில் எழுதுவது என்பது தற்போதைய உத்தேசம். :)

இதற்கு எந்த அளவு வரவேற்பு இருக்கும் என்று தெரியவில்லை. வரவேற்பு நன்றாக இருந்தால் இதை ஒரு புத்தகமாக வெளியிடும் ஒரு எண்ணமும் இருக்கிறது. ஹா ஹா ஹா ;)

21 comments:

Anand said...

rooms, kalakureenga ponga....mudiyala
unnoda sagajamaana tamil vaarthagalado chuvadayae kaanum??

Vijay said...

ஸ்டார்டிங் எல்லாம் நல்ல தான் இருக்குது..போக போக எப்படி இருக்குதுன்னு பாக்கலாம்..

RaaM said...

Welcome to the world of Blogs!

Vigneshwaran G said...

@rooms : Ennoda sahajamaana tamil vaarthaigalai ellam pathivu seyya mudiyathu :)
@KVR : plannin to update on weekly basis for sure...

Vigneshwaran G said...

@Ramkumar : Thanks, ungala mathiri aalungathaan ennoda inspiration :)

VJ said...

Dei parava illada ...nalla dhan eludhurae......good luck with ur blog.....

natarchitect said...

pankali kalakkare da...

அண்ணாமலையான் said...

வாங்க வாங்க.. வாழ்த்துக்கள்.. தொடர்ந்து எழுதுங்கள், நிறய படியுங்கள்... எப்போதும் வெற்றி பெற மீண்டும் வாழ்த்துக்கள்.....

செந்தில் நாதன் Senthil Nathan said...

வாங்க தல.. முதல் இடுகை சூப்பர். செந்தமிழ் துள்ளி வெளயாடுது....வரவேற்பும் பயங்கரமா இருக்கு...நல்ல இடுகைகள் பல எழுத் உனக்கு வாழ்த்துக்கள், இறைவனிடம் பிரார்த்தனைகள்..

அப்புறம் பின்னுட்டத்துக்கு வார்த்தை சரிபார்த்தல் வேண்டாமே...

ஸ்ரீ.... said...

வருக! வருக. நல்ல ஆரம்பம். தொடர்ந்து எழுதுங்கள்.

ஸ்ரீ....148

உலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com) said...

உங்கள் வரவு நல்வரவாக

எங்கள் வாழ்துக்கள்

(முதல் இடுகையெ அருமை தொழா)

ஜிஎஸ்ஆர் said...

வாழ்த்துகள் நண்பா

வாங்க நண்பா மதுரை பக்கமுனு சொல்றிங்க நானும் உங்களுக்கு பக்கதில் தான் நண்பா இருக்கேன் என் ஊரு மானாமதுரை

(வேர்டு வெரிபிகேசன் எடுத்தா நல்லாயிருக்கும்)


வாழ்க வளமுடன்



என்றும் அன்புடன்
ஞானசேகர்

காஞ்சி முரளி said...

முதலில்
வாழ்த்துக்கள்.....

மன அழுத்ததை பற்றி
குறிப்பிட்டிருந்தீர்கள்.....
நல்ல எண்ணங்கள்
மனதில் ஆக்கிரமித்திருந்தால்
மன அழுத்தம் இருக்காது என்பது
என் எண்ணம்.....

நட்புடன்..........
காஞ்சி முரளி................

Vigneshwaran G said...

Vaazhthiya anaithu nalla ullangalukkum nandri. Now I have removed word verification in comment section. Thanks!

மதுரை சரவணன் said...

NANRAKA VANTHULLATHU . VAALTHTHUKKAL. THOTARATTUM NATBU.

DREAMER said...

வாழ்த்துக்கள் GV,

ஹேப்பி ப்லாக்டே டு யூ... தொடர்ந்து எழுதுங்கள். வந்தாரை வாழவைக்கும் தமிழகம் என்பது போல் வந்தாரை வாழ்த்திவைக்கும் ப்லாக் உலகம்.

அஹோரி said...

வெறும் பொழுது போக்குக்கு மட்டுமாக இல்லாமல். பயனுள்ளதாகவும் இருக்கட்டும். வாழ்த்துக்கள்.

ஹிப்ஸ்... said...

வாழ்த்துகள் நண்பா...

kailash,hyderabad said...

வாழ்த்துகள் நண்பா.தொடர்ந்து எழுதுங்கள்சுருக்கமாக தெளிவாக எழுதுங்கள். நத்தை ஊர்வதை பற்றி எழுதினால் கூட நடை விறுவிறுப்பாக இருக்குமாறு
எழுத வாழ்த்துக்கள்.

Vijay Anand said...

Hats Off to GV !!!

Looks like a Professional . . .

ALL THE BEST!!!

AWAITING FOR YOUR NEXT POST!

Vigneshwaran C said...

Nalla muyarchi GV.... All the best.. Waiting for the next post :)